உலகம்

ஆப்கன் பெண் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம்: நீதி கோரி ஆயிரக்கணக்கான பெண்கள் காபூலில் பேரணி

ஏபி

ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலில் குர்ஆனை எரித்ததாக கும்பலால் அடித்துக் கொல்லப்பட்ட இளம்பெண்ணுக்கு நியாயம் கேட்டு நூற்றுக்கணக்கான பெண் கள் காபூலில் நேற்று பிரம்மாண்ட பேரணி நடத்தினர்.

பெண்களுக்கு சம உரிமை வழங் கப்படவேண்டும்.அவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஊர்வலத்தில் பங்கேற்றோர் வலியுறுத்தினர்.

காபூலைச் சேர்ந்த 27 வயது பெண் பர்குந்தா. கடந்த 19-ம் தேதி அந்த நகரின் மசூதிக்கு சென்ற அவர், புனித நூலான குர்ஆனின் சில பக்கங்களை எரித்ததாக சிலர் குற்றம் சாட்டினர்.

அதைத் தொடர்ந்து ஆயிரத்துக் கும் மேற்பட்டோர் திரண்டு, அந்தப் பெண்ணை அடித்து உதைத்து கொடூரமாக கொலை செய்தனர். பின்னர் காபூல் ஆற்றங்கரையில் உடலை தீ வைத்து எரித்தனர்.

இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தின.

உயிரிழந்த பர்குந்தாவின் இறுதிச் சடங்கில் யாரும் பங்கேற் கக்கூடாது என்று பழமைவாத தலைவர்கள் சிலர் எச்சரிக்கை விடுத்தனர். ஆனால் அதை மீறி பெண்களே சவப்பெட்டியை சுமந்து சென்று அடக்கம் செய்தனர்.

பர்குந்தா படுகொலை விவகாரத் தில் போலீஸார் நடத்திய முதல்கட்ட விசாரணையில் அந்தப் பெண் நிரபராதி என்பது தெரியவந்துள் ளது. உயிரிழந்த பெண் சிறிது மன நலம் பாதிக்கப்பட்டவர் என்றும் பெர்சிய மொழி புத்தகத்தின் சில பக்கங்களை மட்டுமே அவர் எரித் துள்ளார் என்பதும் விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் ஆப்கானிஸ் தான் மனித உரிமை ஆர்வலர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. பர்குந்தா கொல் லப்பட்ட ஷா-டோ ஷாம்சிரா மசூதி அருகே நேற்று ஆயிரக்கணக்கான பெண்கள் திரண்டனர். அவர்கள் அங்கிருந்து காபூல் நகரின் முக்கிய வீதிகள் வழியாக பேரணியாகச் சென்றனர்.

ஆப்கானிஸ்தானில் பெண் களுக்கு சம உரிமை வழங்கப்பட வேண்டும்.அவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். உயிரிழந்த பெண்ணின் மரணத் துக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று ஊர்வலத்தில் பங்கேற்றோர் உரக்க கோஷமிட்டனர்.

பேரணியில் பங்கேற்ற ஆப்கா னிஸ்தான் பெண்கள் ஆணைய தலைவர் படானா கைலானி பேசிய போது, இன்றைய இளைய தலை முறையினர் போரை தவிர வேறு எதையும் அறிந்திருக்கவில்லை, அவர்களுக்கு கல்வியறிவு இல்லை, வேலையில்லை, இதனால் நாட் டில் பல்வேறு குழப்பங்கள் ஏற்படு கின்றன என்று குற்றம் சாட்டினர்.

இதுவரை 18 பேர் கைது

பர்குந்தா கொலை தொடர்பாக 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கொலையில் தங்களுக்கு தொடர்பு இருப்பதாக அவர்கள் ஒப்புக்கொண்டுள்ளதாக காபூல் காவல்துறை தலைவர் அப்துல் ரஹ்மான் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT