உலகம்

அமெரிக்க காவல் துறையினரின் செயல்பாடுகளில் மாற்றம் தேவை: ஒபாமா

பிடிஐ

அமெரிக்காவில் சமீப காலமாக நடந்து வரும் பிரச்சினைகளைக் குறிப்பிட்டு காவல் துறையினரின் செயல்பாடுகளில் மாற்றம் தேவை என்று அந்நாட்டு அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார்.

இது குறித்து அமெரிக்க அதிபர் ஒபாமா, "பெர்குஷனில் மைக்கல் ப்ரவுன் மற்றும் நியூயார்க்கில் எரிக் கார்னர் ஆகியோரின் படுகொலைகள் இங்குள்ள பல்வேறு சமூகத்தினரைப் பாதிக்கச் செய்துள்ளது. இந்தத் தருணம் நமது கண்ணோட்டத்திலும் செயல்பாடுகளிலும் மாற்றத்தைக் கொண்டு வர வேண்டியதை உணர்த்துவதாக உள்ளது.

அனைவரும் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என்பதே காவல் துறையினரின் நோக்கம். அந்த வகையில் மாற்றங்களுக்கு ஏற்றவாறு முக்கிய செயல்முறை மாற்றங்களை நாம் ஏற்படுத்த வேண்டியுள்ளது" என்றார் ஒபாமா.

'21-ஆம் நூற்றாண்டுக்கான காவல் கோட்பாடு' என்ற செயல் திட்டத்தை வெள்ளை மாளிகையில் வெளியிட்ட அமெரிக்க அதிபர் ஒபாமா இவ்வாறு தெரிவித்தார்.

SCROLL FOR NEXT