உலகம்

அல்-காய்தா ராணுவ தளபதியை கொன்றதாக சிரியா அறிவிப்பு

ஏபி

அல்-காய்தாவின் ராணுவத் தளபதியை சிரிய ராணுவப் படை கொன்றதாக அந்நாட்டு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அல்-காய்தா முக்கிய ராணுவத் தளபதி அபு ஹமாம் அல்-ஷமியை வான்வழித் தாக்குதல் நடத்தி சிரிய ராணுவம் கொன்றதாக தகவல் வெளியானது. இதனை ராணுவம் தெரிவித்ததாக தலைநகர் சனாவை மையமாகக் கொண்ட சிரியா நாட்டு செய்திச் சேனல் உறுதிப்படுத்தியுள்ளது.

மேலும், தாக்குதல் நடத்தப்பட்டது குறித்த விரிவான அறிக்கையை ராணுவம் வெளியிடவில்லை.

SCROLL FOR NEXT