உலகம்

இந்திய தொழிலதிபர் அமெரிக்காவில் சுட்டுக் கொலை

பிடிஐ

அமெரிக்காவில் இந்திய தொழிலதிபர் அமித் படேல் (28) மர்ம நபரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

அமெரிக்காவின் நியூஜெர்ஸி பகுதியில் அமித் படேலின் குடும்பத்துக்கு சொந்தமான மதுபான கடை உள்ளது. இந்த கடையில் நேற்றுமுன்தினம் அவர் தனியாக இருந்தார். அப்போது மர்ம நபர் ஒருவர், அவரை சுட்டுக் கொன்றுவிட்டு தப்பியோடிவிட்டார்.

கொலைக்கான காரணத்தை உடனடியாக யூகிக்க முடியவில்லை. அண்மையில் அமெரிக்காவின் அலபாமா நகரில் இந்திய முதியவர் சுரேஷ்பாய் படேல் அப்பகுதி போலீஸாரால் தாக்கப்பட்டார். இதில் உடல் பாகங்கள் செயலிழந்து மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் இந்திய தொழிலதிபர் மர்மமான முறையில் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பது அமெரிக்கவாழ் இந்தியர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT