முந்தைய வங்கி நடைமுறையில் வரி ஏய்ப்புக்கு தங்களது சுவிஸ் வங்கி கிளை உதவியதை ஒப்புக்கொண்டதையடுத்து அமெரிக்கா மற்றும் பிரிட்டனின் சட்ட நடவடிக்கைகளை எச்.எஸ்.பி.சி. எதிர்கொள்ளலாம் என்று கூறப்படுகிறது.
செல்வந்தர்கள் கோடிக்கணக்கான மதிப்புடைய தங்களது சொத்துக்கள் கணக்குக்கு வராமல் மறைக்க உதவியது பற்றி தற்போது அமெரிக்கா, தங்கள் நாட்டு வரி ஏய்ப்பாளர்களுக்கு எச்.எஸ்.பி.சி. உதவியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அமெரிக்க சட்ட வல்லுநர்கள் விசாரணை செய்து வருவதாக ராய்ட்டர்ஸ் செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலும், பண மதிப்பு விகிதத்தையும் எச்.எஸ்.பி.சி. திரித்திருக்கலாம் என்று அமெரிக்க அதிகாரிகள் விசாரித்து வருவதாக அமெரிக்க சட்ட அமலாக்க அதிகாரி ஒருவர் நேற்று தெரிவித்தார். மேலும் அந்த வங்கியுடனான 2012-ஆம் ஆண்டின் அரசுதரப்பு ஒப்பந்தத்தையும் மீண்டும் திறக்க அமெரிக்க நீதித்துறை பரிசீலித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
சட்டவிரோத போதை மருந்து மூலம் வங்கிக்கு வந்த பெரும்தொகையை அமெரிக்க நிதி அமைப்புகள் மூலம் வெளிநாடுகளுக்கு கொண்டு செல்ல உதவியதான வழக்கில் எச்.எஸ்.பி.சி. 1.9 பில்லியன் டாலர்கள் செலுத்த வேண்டும். செலுத்துவதன் மூலம் கிரிமினல் வழக்கைத் தவிர்க்க அந்த ஒத்திவைக்கப்பட்ட அரசு தரப்பு ஒப்பந்தத்தின் ஒரு பகுதி வழிவகை செய்திருந்தது.
ஆனால், "தற்போது வரி ஏய்ப்பு மற்றும் அன்னியச் செலாவணி மோசடிகளுக்கு வங்கி நடவடிக்கைகள் உதவும் விவகாரம் அந்த ஒப்பந்தத்தை மீண்டும் திறக்க வேண்டிய நிர்பந்தத்தை ஏற்படுத்துகிறது.” என்று அமெரிக்க சட்ட அமலாக்கப் பிரிவு அதிகாரி ஒருவர் தன் பெயரைக் குறிப்பிடாமல் தெரிவித்தார்.
பிரிட்டனும் வங்கி மீது விசாரணையை நடத்தவுள்ளதாக தெரிவித்தார்.