உலகம்

காஷ்மீரை இணைப்போம்: இம்ரான் கட்சி சபதம்

பிடிஐ

இந்தியா மற்றும் பாகிஸ்தானில் உள்ள காஷ்மீர் பகுதிகளை ஒன்றாக இணைப்போம் என்று இம்ரான்கான் தலைமையிலான தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி சபதமிட்டுள்ளது.

பாகிஸ்தான் முசாபராபாத் நகரில் நடைபெற்ற பொதுக்கூட் டத்தில் அக்கட்சியின் பொதுச் செய லாளர் ஜஹாங்கீர் பேசியதாவது:

காஷ்மீர் மக்களின் உரிமை களுக்காக எங்கள் கட்சி போராடும். ஐ.நா. தீர்மானப்படி காஷ்மீர் மக்களுக்கு சுய நிர்ணய உரிமை வழங்கப்பட வேண்டும். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பாகிஸ் தான் மற்றும் இந்தியாவின் ஆட்சிக் குட்பட்ட காஷ்மீர் பகுதிகளை ஒன்றாக இணைப்போம்.

பாகிஸ்தானின் ஊழல் ஆட்சி யாளர்களை மக்கள் தங்கள் வாக்குரிமையை பயன்படுத்தி தூக்கி எறியும்போது புதிய பாகிஸ் தான் உருவாகும்.

சமூகத்தின் அனைத்து பிரிவு மக்களுக்கும் உரிமை களை உறுதிப்படுத்துவதும், அமைதியான, வளர்ச்சியுடன் கூடிய பாகிஸ்தானை உருவாக்கு வதே எங்கள் போராட் டத்தின் நோக்கம். இவ்வாறு ஜஹாங்கீர் பேசினார்.

SCROLL FOR NEXT