சிரியா, இராக்கில் செயல்பட்டு வரும் ஐஎஸ் தீவிரவாதிகள், போலீஸ் மற்றும் துணைராணுவத்தை சேர்ந்த 43 பேரை உயிருடன் எரித்து கொலை செய்துள்ளனர்.
இராக்கின் மேற்கே உள்ள அன்பார் மாகாணத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. தங்களிடம் பிடிபடுபவர்களை மொத்தமாக சேர்த்து வைத்து கொன்று விடுவதை ஐஎஸ் தீவிரவாதிகள் வழக்கமாக கொண்டுள்ளனர். சமீபத்தில் எகிப்து கிறிஸ்தவர்கள் 21 பேரை கழுத்தை அறுத்து கொலை செய்தனர்.
இந்நிலையில் இராக் போலீஸார் மற்றும் சாவா என்ற துணை ராணுவப் படையைச் சேர்ந்த 43 பேரை கொளுத்தியுள்ளனர். கடந்த 10 நாட்களில் மட்டும் தங்களிடம் பிடிபட்ட 70 பேரை ஐஎஸ் தீவிரவாதிகள் கொடூரமான முறையில் கொலை செய்துள்ளனர். சிரியா, இராக்கில் முக்கிய இடங்களை குறிவைத்து தீவிரமாக தாக்குதலில் ஈடுபட்டுள்ள ஐஎஸ் தீவிரவாதிகள் இராக் தலைநகர் பாக்தாத்தை நெருங்கி வருகின்றனர்.