உலகம்

இந்தியாவுக்கு அமெரிக்கா பாராட்டு

பிடிஐ

இந்திய வெளியுறவுச் செயலாளர் ஜெய்சங்கர் விரைவில் பாகிஸ்தான் செல்வார் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ஜென் சாகி வாஷிங்டனில் நிருபர்களிடம் கூறியதாவது:

இந்தியா, பாகிஸ்தான் இடையேயான அமைதி பேச்சு வார்த்தை தடைபட்டுள்ளது. இந்நிலையில் இந்திய வெளியுறவுச் செயலாளர் ஜெய்சங்கர் விரைவில் இஸ்லா மாபாத் செல்வார் என்று பிரதமர் மோடி அறிவித்திருப்பதை வரவேற்கிறோம். இரு நாடுகளிடையே நல்லுறவை ஏற்படுவதை அமெரிக்கா ஆதரிக்கிறது.

ஐ.எஸ். அமைப்புக்கு இந்தியா தடை விதித்திருப்ப தையும் வரவேற்கிறோம் என்று அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT