விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் பழைய பேட்டியுடன் வெளியான ஃபிரண்ட்லைன் பத்திரிகையை இலங்கையில் வெளியிட அந்நாட்டு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.
முன்னதாக இந்த பத்திரிகையை இலங்கை சுங்கத் துறை அதிகாரி கள் பறிமுதல் செய்து வைத்திருந் தனர்.
தி இந்து குழுமத்தை சேர்ந்த ஃபிரண்ட்லைன் பத்திரிகையின் 30-வது ஆண்டு நிறைவையொட்டி முன்னிட்டு பழைய சம்பவங்களை தொகுத்து பிப்ரவரி 6-ம் தேதி சிறப்பிதழாக வெளியிடப்பட்டது. அதில் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் 1987-ல் அளித்த பேட்டியும் இடம் பெற்றிருந்தது.
இது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று கூறி இலங் கைக்கு சென்ற அப்பத்திரிகைகளை அந்நாட்டு சுங்கத் துறையினர் பறிமுதல் செய்தனர்.
இந்நிலையில் பறிமுதல் செய்து வைத்துள்ள பத்திரிகைகளை வெளியிடுமாறு சுங்கத் துறையின ருக்கு இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உத்தரவிட்டுள்ளார். அந்த பேட்டியில் இலங்கையின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் விஷயங்கள் ஏதும் இல்லை என்றும் விக்கிரமசிங்க கூறியுள்ளார்.
இதுபோன்ற முடிவுகளை எடுக்கும் முன்பு இலங்கை ஊடகத் துறை அமைச்சகத்தை தொடர்பு கொள்ள வேண்டுமென்று அவர் சுங்க துறையினருக்கு அறிவுறுத்தியுள்ளார்.