உலகம்

பாகிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதல்: 8 பேர் பலி

பிடிஐ

பாகிஸ்தானின் லாகூர் நகர காவல் நிலையம் அருகே நடத்தப்பட்ட தற்கொலைப்படைத் தாக்குதலில் 8 பேர் பலியானதாக தெரியவந்துள்ளது.

பாகிஸ்தானில் உள்ள லாகூர் காவல் நிலையம் அருகே இருந்த விடுதி பார்க்கிங்கில் செவ்வாய்க்கிழமை தற்கொலைப்படைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் 8 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதல் நடந்துள்ள பகுதி நகரத்திலேயே அதிக பாதுகாப்பு நிறைந்த பகுதியாகும்.

விடுதியிலிருந்து வெளியே வந்த மர்ம நபர் தன்னிடமிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்ததாக எக்ஸ்ப்ரஸ் டிரிப்யூன் தெரிவித்துள்ளது. துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதற்கு பின்னரே குண்டுவெடிப்பு நடந்ததாக மற்றொரு தகவலும் தெரிவிக்கின்றது.

SCROLL FOR NEXT