உலகம்

சிங்கப்பூர் செல்ல முடியாமல் தவிக்கும் இந்தியர்கள்

பிடிஐ

சிங்கப்பூரில் கட்டுமானப் பணிகளில் மந்தநிலை, வெளிநாட்டுத் தொழி லாளர்களுக்கு விதிமுறைகளை அரசு கடுமையாக்கியது ஆகிய காரணங்களால் அங்கு வேலைக்குச் செல்ல முடியாமல் இந்தியா மற்றும் வங்கதேசத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தவித்து வருவதாக செய்தி வெளியாகியுள்ளது.

சிங்கப்பூரில் கட்டுமானத் துறை யின் வளர்ச்சி கடந்த 2013-ல் 6 சதவீதமும், 2014-ல் 3 சதவீதமும் குறைந்துள்ளதாக ‘தி சிங்கப்பூர் டெய்லி’ கூறுகிறது.

“மேலும் வெளிநாட்டுத் தொழிலா ளர்களுக்கான விதிமுறைகளை சிங்கப்பூர் அரசு கடுமையாக்கி யுள்ளதால் புதிய தொழிலா ளர்களுக்கான வாய்ப்பு குறைந் துள்ளது.

இங்குள்ள நிறுவனங்கள் தங்களது தொழிலாளர்களை தக்கவைத்துக் கொள்ளவும் அவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளித்து புதிய பணியிடங்களுக்கு பயன் படுத்திக்கொள்ளவும் விரும்புகின்றன” என்று அந்த நாளேட்டில் கூறப் பட்டுள்ளது.

SCROLL FOR NEXT