உலகம்

90 கிறிஸ்தவர்களை கடத்திய ஐ.எஸ். தீவிரவாதிகள்

ராய்ட்டர்ஸ்

சிரியாவில் இருந்து 90 பேரை ஐ.எஸ்.அமைப்பினர் கடத்திச் சென்றுள்ளனர். இவர்கள் அனைவரும் கிறிஸ்தவ கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது.

இதுகுறித்து பிரிட்டனை தலைமையிடமாகக் கொண்டுள்ள `மனித உரிமைக்கான சிரியா ஆய்வகம்' அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், "குர்து இன மக்கள் வசித்து வரும் ஹசாகா நகரத்தில் கிறிஸ்தவ‌ கிராமங்களும் உள்ளன. அங்கு வாழ்ந்து வரும் கிறிஸ்தவர்களில் பலர் ஐ.எஸ்.அமைப்பினரால் கடத்திச் செல்லப்படுகிறார்கள்" என்று கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT