வடக்கு ஜப்பானில் 2011ஆம் ஆண்டு ஏற்பட்ட அதே இடத்தில் கடலுக்கு அடியில் நிலநடுக்கம் ஏற்பட சிறிய அளவிலான சுனாமி அலை ஏற்பட்டது.
குஜியில் 20 செ.மீ., அல்லது 8 அங்குலம் உயரமுள்ள சுனாமி அலை வந்து சென்றதாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குஜியில் கடல்நீர்மட்டம் லேசாக அதிகரிக்கிறது என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்றாலும் ஆபத்தான நிலைக்கு உயராது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஐவேட் தீவுக்கூட்டப் பகுதிகளில் 10 செ.மீ உயரத்திற்கு சுனாமி அலை அடித்ததாக பதிவாகியுள்ளது.
இதுவரை சேதம், உயிரிழப்பு பற்றிய தகவல்கள் இல்லை.
இன்று காலை மியாகோவுக்கு கிழக்கே 210 கிமீ தொலைவில் ரிக்டர் அளவில் 6.9 என்று பதிவான நிலநடுக்கம் ஏற்பட்டது. கடலுக்கு அடியில் 10கிமீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
2011 ஆம் ஆண்டு மிகப்பெரிய பேரழிவு சுனாமி அலைகளை உருவாக்கிய நிலநடுக்கத்தின் பின் அதிர்வாக இது இருக்கலாம் என்று புவியியல் நிபுணர்கள் கருதுகின்றனர்.
பல்வேறு டெக்டானிக் பாறைகள் கூடும் இடத்தில் ஜப்பான் அமைந்துள்ளதே அங்கு மாபெரும் பூகம்பம் தோன்றுவதற்குக் காரணமாக இருந்து வருகிறது.