நடுவானில் மாயமான மலேசிய விமானத்தின் தேடல், மனித வரலாற்றில் மிகவும் கடினமான தேடல் என்று ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அபாட் கூறினார்.
மலேசிய விமானம் எம்.எச். 370, தேடும் பணியில் எந்த விதமான முன்னேற்றமும் இல்லாமல் தொடர்ந்து வரும் நிலையில், விமானத்தில் பயணித்தவர்களின் உறவினர்கள் கடந்த சில நாட்களாக போராட்த்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
விமான தேடல் குறித்த தகவல்களை மலேசிய அரசு வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும் என்று கூறி அவர்கள் மலேசிய தூதரகங்களை முற்றுகையிட்டனர்.
இந்த நிலையில் கேன்பெர்ரா நகரில் ஆஸ்திரேலிய முன்னாள் விமான படை தளபதியும் தேடுதல் பணியின் ஒருங்கிணைப்பாளருமான ஆங்கஸ் ஹூஸ்டன் மற்றும் ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அபோட் செய்தியாளர்களை சந்தித்து பேசினர்.
அப்போது அபாட் கூறூகையில், "இந்திய பெருங்கடல் பகுதியில் கடல்மட்டத்தில் நடைபெற்ற தேடல் நிறுத்தப்படுகிறது. மேலும், ஆழ்கடல் தரப்பகுதியில் இந்த தேடலானது தொடர்ந்து நடைபெறும். எனவே, மலேசிய விமான தேடுதல் வேட்டையானது புதிய கட்டத்திற்குள் நுழைந்துள்ளது.
இதுவரை நாங்கள் கடல் பகுதியில் மேற்கொண்ட தேடலில் எந்த ஒரு ஆதாயமும் கிடைக்கவில்லை என்பதை நான் மிகுந்த வருத்ததுடன் தெரிவித்துக்கொள்கிறேன். மனித வரலாற்றில் இது மிக கடினமான தேடலாக கருதப்படுகிறது.
இந்த 52-வது நாளில் கடல் தரைப்பரப்பில் தேடல் விரிவாக்கப்படுகிறது. இதில், ஏதேனும் தகவல் கிடைக்கலாம் என நம்புகிறோம். இந்த தேடல் அடுத்த 8 மாதங்களுக்கு நடைபெரும் நிலையில் திட்டமிடப்பட்டுள்ளது" என்றார்.