இலங்கை வட மாகாண சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட இனப்படுகொலை தொடர்பான தீர்மானத்தை வாபஸ் பெற வேண்டும் என்று நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், இலங்கை சுதந்திரா கட்சியின் மூத்த தலைவருமான நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கொழும்பில் அவர் கூறியதாவது:
இத்தகைய தீர்மானங்களை நிறைவேற்ற மாகாண சட்டப்பேரவைக்கு அதிகாரம் இல்லை. அதிபர் மைத்ரிபால சிறிசேனா தலைமையிலான அரசு தேசிய நல்லிணக்கத்தை கட்டிக் காப்பாற்ற நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நேரத்தில் இதுபோன்ற தீர்மானங்கள் நிறை வேற்றப்படுவது நல்லிணக்க நடவடிக்கைகளை நீர்த்துப் போகச் செய்யும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள் ளார்.