உலகம்

முதல் காதலை மறப்பது கடினம்: புது ஆய்வில் பழைய முடிவு

ஐஏஎன்எஸ்

முதல் காதலை மறப்பது மிகக் கடினம் என்று பிரிட்டனில் நடத்தப்பட்ட புதிய ஆய்வு ஒன்றின் முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முடிவானது, தமிழ் இலக்கியம், சினிமா உள்ளிட்ட அனைத்து வடிவங்களிலும் பல்வேறு காலகட்டத்தில் வெவ்வேறு வழிகளில் சொல்லப்பட்ட பழைய விஷயம்தான் என்பது கவனிக்கத்தக்கது.

பிரிட்டனில் இந்தப் புதிய ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டவர்களில் பெரும்பாலானோர் தங்கள் முதல் காதலை இன்னும் நினைத்துக் கொண்டிருப்பதாகவும், 10-ல் 4 பேர், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களின் உதவியுடன் மீண்டும் முதல் காதலோடு இணைந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

10-ல் 4 பேர் தங்கள் பழைய காதலைப் பற்றி நினைத்துக் கொண்டிருக்கின்றனர் என்றும், இன்னும் பழைய நினைவுகளை சுமப்பதாகவும் இந்த ஆய்வில் பதிலளித்துள்ளனர்.

'தி பெஸ்ட் ஆஃப் மீ' (The Best of Me) என்ற திரைப்படத்திற்காக மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில் இவ்வாறு தெரியவந்துள்ளது. முதல் காதலுக்கு இரண்டாம் வாய்ப்பை தரும் இருவரைப் பற்றிய படம் இது.

"பலர் தங்கள் முதல் காதலை திரும்பிப் பார்க்கும்போது, என்ன நடந்தது, என்ன நடந்திருக்கலாம், நடந்திருந்தால் என்ன ஆகியிருக்கும் என நினைக்கின்றனர்" என தயாரிப்பு நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறினார்.

SCROLL FOR NEXT