டயானாவுடனான திருமணத்தைத் தடுத்து நிறுத்த இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் முயன்றார் என்றும், டயானாவுடன் தன்னால் சேர்ந்து வாழ முடியாது என தன் நண்பர் ஒருவரிடம் கூறியதாகவும் புதிய தகவல் ஒன்று வெளியாகி யுள்ளது. இதனால் இங்கிலாந் தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இளவரசர் சார்லஸின் வாழ்க்கை வரலாறு குறித்து `சார்லஸ்: ஹார்ட் ஆஃப் எ கிங்' எனும் தலைப்பில் ஒரு புத்தகத்தை கேத்தரின் மேயர் என்பவர் எழுதியுள்ளார்.
அதில், இளவரசர் சார்லஸ் மற்றும் டயானா இருவருமே தங்க ளுக்கு நடைபெறவிருந்த திரு மணத்தை வேறு வேறு காரணங் களுக்காகத் தடுத்து நிறுத்தப் பார்த் தார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
அதற்குக் காரணமாக, கமீலா பார்க்கர் பவுல்ஸ் என்ற பெண்ணுடன் சார்லஸுக்கு ஏற்கெனவே காதல் இருந்து வந்தது என்பதை டயானா தெரிந்துகொண்டார். ஆகவே திருமணத்தை நிறுத்த முயன்றார்.
அதேபோல, டயானாவுக்கு முறையற்ற உணவுப் பழக்கம் இருந்ததாலும், தன்னுடைய ஏதிர்பார்ப்புக்கு ஏற்றாற்போல் இல்லை என்பதாலும், சார்லஸ் இந்தத் திருமணத்தைத் தடுத்து நிறுத்த முயன்றார் என்றும் கூறப்பட்டுள்ளது.
தவிர, தன்னால் சார்லஸுடன் இணைந்து வாழ முடியாது என்பதை ஏற்கெனவே தன் வாழ்க்கை வரலாற்றை எழுதிய ஆண்ட்ரூ மார்ட்டன் என்பவரிடம் டயானா கூறியிருந்தார் என்பதையும் கேத்தரீன் மேயர் குறிப்பிடுகிறார்.
சமீபத்தில் வெளியான இந்தப் புத்தகம் இங்கிலாந்து அரச குடும் பத்தினரிடையே பெருத்த அதிருப் தியை ஏற்படுத்தியுள்ளதாக செய்தி கள் தெரிவிக்கின்றன.