பாகிஸ்தானில் இரண்டு தீவிர வாதிகளுக்கு நேற்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கராச்சி நகர் பள்ளிகளின் மீது மர்ம நபர்கள் கையெறி குண்டுகளை வீசினர்.
பெஷாவர் பள்ளி தாக்குதலைத் தொடர்ந்து மரண தண்டனை நிறை வேற்றுவதற்கான தடையை பாகிஸ் தான் அரசு நீக்கியது.
தற்போதைய நிலையில் பாகிஸ்தான் சிறைகளில் சுமார் 8000 மரண தண்டனை கைதிகள் உள்ளனர்.
அவர்களில் 500 தீவிரவாதிகளை தூக்கிலிட அந்த நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது.
கடந்த டிசம்பர் இறுதி முதல் தீவிரவாதிகள் தொடர்ந்து தூக் கிலிடப்பட்டு வருகின்றனர். அந்த வரிசையில் லஷ்கர்-இ-ஜாங்வி என்ற அமைப்பைச் சேர்ந்த 2 தீவிரவாதி கள் நேற்று காலை கராச்சி மத்திய சிறையில் தூக்கிலிடப்பட்டனர்.
இருவரும் ஷியா முஸ்லிம் களுக்கு எதிராக செயல்பட்டு வந்த வர்கள். கடந்த 2001-ம் ஆண்டில் கராச்சியில் ஷியா பிரிவைச் சேர்ந்த டாக்டரை கொலை செய்த வழக்கில் அவர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
இருவரையும் சேர்த்து பாகிஸ்தானில் இதுவரை 22 தீவிரவாதிகள் தூக்கிலிடப்பட் டுள்ளனர்.
பள்ளிகளில் கையெறி குண்டுவீச்சு
தீவிரவாதிகள் தூக்கிலிடப்பட் டதை எதிர்த்து கராச்சியில் செயல் படும் இரண்டு பள்ளிகள் மீது மர்ம நபர்கள் கையெறி குண்டுகளை வீசினர். அந்த இடத்தில் சில துண்டு பிரதிகள் கைப்பற்றப்பட்டன. அதில் தீவிரவாதிகளுக்கு மரண தண்டனையை நிறைவேற்றினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.