உலகம்

தலையில் பாய்ந்த கத்தியுடன் 2 மணி நேரம் கார் ஓட்டிய நபர்: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்

பிடிஐ

அமெரிக்காவில் தலையில் பாய்ந்த கத்தியுடன் 2 மணி நேரம் காரை ஓட்டி வந்து மருத்துவமனையில் சேர்ந்தார் பிரேசிலைச் சேர்ந்த நபர். அமெரிக்காவில் டெரிசினா பகுதியில் உள்ள ஒரு ஒதுக்குப் புறமான வீட்டில் விருந்து நடைபெற்றுள்ளது.

அப்போது அங்கிருப்பவர் களிடையே ஏற்பட்ட தகராறில் பிரேசிலை சேர்ந்த ஜுவாசிலோ நியூனிஸ் என்பவரது தலையில் கத்தி குத்து விழுந்தது. 30 செ.மீ. நீளமுள்ள அந்த கத்தி அவரது இடது கண்ணுக்கு அருகே பாய்ந்து வாயை கடந்து வலது தாடை வரை இறங்கியது.

இது தவிர அவரது தோள்பட்டை, தொண்டை, மற்றும் மார்பிலும் கத்தி குத்து விழுந்திருந்தது. இந்த நிலையில் 2 மணி நேரம் காரை ஓட்டிய அவர் சுமார் 97 கி.மீ. தூரம் உள்ள மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தார்.

ரத்தம் சொட்டும் நிலையில் மருத்துவமனைக்குள் நுழைந்த அவரை மருத்துவர்கள் அவசர சிகிச்சை பிரிவுக்கு கொண்டு சென்று தலையில் பாய்ந்த கத்தியை நீக்கி சிகிச்சை அளித்தனர். அதன் பிறகு அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

கத்தி அவரது தலையில் பாய்ந்து பல்வேறு முக்கிய நரம்புகளையும், ரத்த குழாய்களையும் சேதப்படுத் தியிருந்தது. இதுபோன்று காயம் ஏற்பட்டால் உடனடியாக சிகிச்சை அளிக்க வேண்டும். இல்லையென்றால் உயிர் பிரிந்து விடும்.

ஆனால் நியூனிஸ் அந்த காயத்தை வைத்துக் கொண்டு காரை இரண்டு மணி நேரம் ஓட்டியதும், மருத்துவமனைக்கு வரும் வரை தாக்குப்பிடித்ததும் வியப்பான விஷயம்தான் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த கத்தி குத்து சம்பவம் தொடர்பாக அமெரிக்க போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

SCROLL FOR NEXT