மிஸ் கொலம்பியா பட்டத்தை வென்ற பாலினா வேகா மிஸ் யூனிவர்ஸ் (பிரபஞ்ச அழகி) பட்டத்தை வென்றுள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை நடந்த இந்த போட்டியில் 87 நாடுகளைச் சேர்ந்த அழகிகள் பங்கெடுத்திருந்தனர். மிஸ் அமெரிக்கா நியா மற்றும் மிஸ் உக்ரைன் டயானா ஆகியோர் அடுத்தடுத்த இடங்களைப் பெற்றனர்.
22 வயதான பாலினா வேகா, இதுவே தனது கடைசி அழகிப் போட்டியாக இருக்கும் என்றும், மீண்டும் படிப்பைத் தொடர்வதில் தான் ஆர்வமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
"அழகுக்கும் கவர்ச்சிக்கும் மட்டுமே முக்கியத்துவம் கொடுக்காமல் புத்திசாலியாகவும், கடும் உழைப்பாளியாகவும் இருக்கும் பெண்ணாக, இன்றைய பெண்களின் பிரதிநிதியாக இருக்க முடிந்தால் எனது கனவு நனவானதைப் போல" என்று வேகா கூறியுள்ளார்.