உலகம்

ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அரசுக்கு எதிராக பேரணி: பாகிஸ்தான் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 30 பேர் உயிரிழப்பு

செய்திப்பிரிவு

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அரசுக்கு எதி​ரான பேரணி​யில் பாது​காப்பு படை​யினர் நடத்​திய துப்பாக்கிச் சூட்டில் 30-க்​கும் மேற்​பட்​டோர் உயி​ரிழந்​தனர்.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அதி​கரித்து வரும் வாழ்க்​கைச் செல​வு, நிர்​வாக அலட்​சி​யம், சிறு​பான்​மை​யினருக்கு எதி​ரான அரசி​யல் பாகு​பாடு மற்​றும் அத்​து​மீறல்​களுக்கு எதி​ராக, கடந்த மாதம் முதல் போராட்​டம் நடை​பெற்று வரு​கிறது.

இந்​நிலை​யில் ஜூன் 27 முதல் ஆகஸ்ட் 10 வரையி​லான சட்​டப்​பேரவை தேர்​தலை புறக்​கணிக்​கு​மாறு கூட்டு அவாமி நடவடிக்கை குழு (ஜேஏஏசி) அழைப்பு விடுத்​துள்​ளது. மேலும் பாகிஸ்​தான் அரசுக்கு எதி​ரான போராட்​டங்​களை முன்​னின்று நடத்தி வரு​கிறது. இப்​போ​ராட்​டங்​களை ஒடுக்க ஆயுதம் ஏந்​திய கூடு​தல் படைகளை பாகிஸ்​தான் அரசு அனுப்​பி​யுள்​ளது.

SCROLL FOR NEXT