உலகம்

உலக சாதனை இளைஞர்கள்: ஃபோர்ப்ஸ் பட்டியலில் 44 இந்தியர்கள்

பிடிஐ

உலக அளவில் பல்வேறு துறை களில் சாதனை புரிந்துள்ள இளைஞர்கள் (30 வயதுக் குட்பட்டவர்கள்) பட்டியலை பிரபல அமெரிக்க வர்த்தக இதழான ஃபோர்ப்ஸ் ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது.

இந்த ஆண்டு ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ள பட்டியலில் இந்தியர்கள் மற்றும் இந்திய வம்சாவளியினர் 44 பேர் இடம்பெற்றுள்ளனர்.

4-வது ஆண்டாக ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ள இந்தப் பட்டியலில் உலக அளவில் 600 பேர் இடம்பெற்றுள்ளனர். சில்லறை வர்த்தகம், பொழுதுபோக்கு, அறிவியல், நிதி, ஊடகம், தொழில்முனைவோர், சட்டம் மற்றும் கொள்கை உருவாக்கம், தொழில்நுட்பம் என 20 துறைகளைச் சேர்ந்தவர்கள் இந்தப் பட்டியலில் உள்ளனர்.

ஹாரி பாட்டர் நடிகையும் ஐ.நா. நல்லெண்ணத் தூதருமான எம்மா வாட்சன், நடிகர் ஜாக் எஃப்ரான், கூடைப்பந்து விளையாட்டு வீரர் ஜேம்ஸ் ஹார்டன், என்.பி.ஏ. நட்சத்திரம் கிரிஸ் பால் உள்ளிட்ட பிரபலங்கள் இந்தப் பட்டியலில் உள்ளனர்.

44 இந்தியர்கள்

இந்தியர் மற்றும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 44 பேர் இந்தப் பட்டியலில் வருகின்றனர்.

வென்சர் கேபிடல் பிரிவில் நிதேஷ் பான்டா (28), நுகர்வோர் தொழில்நுட்ப பிரிவில் அன்கூர் ஜெயின் (24), ஹாலிவுட் புகழ் அவினாஷ் காந்தி (26), பெட்டர் வாக் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பார்த்தா உன்னாவா (22), சில்லறை வர்த்தகப் பிரிவில் அமன் அத்வானி (26), விளையாட்டுப் பிரிவில் ஐஷ்வீன் ஆனந்த் (29), மருந்து உற்பத்தி துறையில் விஜய் சுடாசாமா (28), உணவு தயாரிப்பு துறையில் வினித் மிஸ்ரா (28), ஹேக்கர்ரேங்க் என்ற சேவை நிறுவனத்தை தொடங்கியவர்களில் ஒருவரான விவேக் ரவிசங்கர் (27), குறைந்த செலவில் தண்ணீர் சுத்திகரிக்கும் தொழில்நுட்பத்தை கண்டறிந்த தீபிகா குருப் (16) உள்ளிட்டோர் இதில் இடம்பெற்றுள்ளனர்.

மேலும் எம்.ஐ.டி. உதவிப் பேராசிரியர் நிகில் அகர்வால் (28), ஒபாபா அரசில் பணியாற்றும் விக்ரம் ஐயர், அமெரிக்காவின் ஓகியோ மாநில பிரிதிநிதிகள் அவை உறுப்பினர் நீரஜ் அதானி (23), ஐ.நா.வுக்காக பணியாற்றி வரும் ராகுல் ரெக்கி (23) ஆகியோரும் இதில் இடம்பெற்றுள்ளனர்.

SCROLL FOR NEXT