புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுக்கும் புதிய மூலக்கூறு ஒன்று ஆய்வாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அது செயல்படும் விதமும் விளக்கப்பட்டுள்ளது.
புற்றுநோய் செல்களின் ‘உயிரியல் கடிகாரத்தை’ மறு அமைப்பாக்கம் செய்து புற்றுநோய் கட்டியின் வளர்ச்சியைத் தடுக்கும் புதிய மூலக்கூறு ஒன்றை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
அந்த மூலக்கூறு '6-தியோ-2’ (6-thio-2)- டீஆக்சிகுனோசைன் (6-thiodG) என்று அழைக்கப்படுகிறது. இது கேன்சர் செல்களின் வளர்ச்சியைத் தடுப்பதாக தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
"டீஆக்சொகுனோசைன் குறைந்த அளவில் கொடுத்த போதும் பலதரபப்ட்ட புற்றுநோய் செல்களுக்கு எதிராகவும் பரவலான முறையில் இந்த மூலக்கூறு செயல்படுகிறது” என்று டெக்ஸாஸ் பல்கலைக் கழக பேராசிரியர் ஜெரி ஷேய் என்பவர் தெரிவித்தார்.
இந்த மருந்தை எலிகளில் பரிசோதனை செய்து பார்த்தபோது, லிவர், கிட்னி, ரத்தம் என்று எதிலும் பக்கவிளைவுகள் ஏற்படவில்லை என்றும் இந்த ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
செல்களின் ஆயுளை முறைப்படுத்தும் ஒரு தனிச்சிறப்பான உடற்கூறு நடைமுறையை இந்த மருந்து தனது இலக்காக்கிக் கொள்கிறது. அதாவது செல்களின் ஆயுளைத் தீர்மானிக்கும் கெடிகாரமே அது. அந்த உயிரியல் கெடிகாரம் செயல்படுவதற்குக் காரணமாக இருப்பது டெலோமியர்ஸ் என்ற டி.என்.ஏ. அமைப்பு. குரோமோசோம்களில் செயலாற்றி செல்களின் ஆயுளைக் கூட்டுவது அதுவே. செல்கள் பிரியும் போது இது சிறியதாகிவிடுகிறது.
ஒரு அளவுக்கு மேல் டெலோமியர்ஸ் சிறியதாக வழியே இல்லை என்ற நிலையில் செல்கள் பிரிவது தடுக்கப்படுகிறது. செல்கள் இறக்கின்றன. ஆனாலும் கேன்சர் செல்கள் செயலாற்றும் விதத்தின் அதிசயம் என்னவெனில் இந்த டெலோமியர்ஸை சிறியதாக விடாமல் ஆர்.என்.ஏ. புரோட்டீன் ஒன்று தடுக்கிறது. அதாவது ஒவ்வொரு முறை செல்கள் பிரியும் போதும் டெலோமியர்ஸ் சிறிதாகி விடாமல் இந்த ஆர்.என்.ஏ தடுக்கிறது. இதனால் கேன்சர் செல்கள் அழியாமல் வளர்ச்சியடைகின்றன.
இந்த நடவடிக்கையை எதிர்ப்பதுதான் இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள 6-thiodG என்ற மூலக்கூறாகும்.
இந்த ஆய்வு பெரிய அளவுக்கு பலன் தரும் மருத்துவ வட்டாரங்களில் எதிர்பார்க்கப்படுகிறது.