பிரதமர் நரேந்திர மோடி விடுத்த அழைப்பை ஏற்றுக் கொண்ட இலங்கை அதிபர் சிறிசேனா முதலில் இந்தியாவுக்கு வருகை தரவிருக்கிறார்.
அதிபர் பொறுப்பேற்ற பிறகு முதலில் இந்தியாவுக்கு அவர் அதிகாரபூர்வமாக அரசுமுறைப் பயணம் மேற்கொள்வது குறிப்பிடத்தகுந்தது.
சிறிசேனாவின் இந்திய பயணத்தை உறுதி செய்யும் விதமாக, “மோடி எங்கள் அதிபரை இந்தியாவுக்கு முதலில் வருகை தருமாறு அழைத்துள்ளார். இதனையடுத்து அடுத்த மாதம் அதிபர் சிறிசேனா இந்தியாவுக்கு வருகை தரவிருக்கிறார்” என்று மூத்த அரசியல்வாதியும், அதிபர் சிறிசேனாவின் செய்தித் தொடர்பாளருமான ரஜித சேனரத்ன கொழும்புவில் இன்று தெரிவித்தார்.