பிரான்ஸ் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தும் வகையில் லண்டன் நகரின் முக்கிய கட்டடங்கள் அனைத்திலும் பிரான்ஸின் மூவர்ண கொடியை பிரதிபலிக்கும் வகையில் வண்ண விளக்கு வெளிச்சத்தால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் செயல்படும் சார்லி ஹெப்டோ பத்திரிகை அலுவலகத்தில் கடந்த 7-ம் தேதி புகுந்த இரண்டு தீவிரவாதிகள் 12 பேரை சுட்டுக் கொன்றனர். அதைத் தொடர்ந்து பல்பொருள் அங்காடியில் புகுந்து பிணைக் கைதிகளாக பிடித்து வைத்திருந்த 4 பேரையும் தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றனர். பாரீஸ் நகரில் 3 நாட்களாக தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் உலக நாடுகளையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இந்த நிலையில் தீவிரவாதத் தாக்குதலில் பலியானவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தும் விதமாக இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள முக்கிய கட்டடங்கள் அனைத்திலும் பிரான்ஸின் மூவர்ண கொடியை பிரதிபலிக்கும் வண்ண ஒளிவிளக்கு வெளிச்சத்தால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.
அதே நேரத்தில் இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூனும் பாரீஸ் நகரில் நடந்த பிரமாண்ட பேரணியில் கலந்துகொண்டார்.