உலகம்

தீவிரவாத அமைப்புகளுக்குத் தடை: பாகிஸ்தான் நடவடிக்கை

பிடிஐ

அதிபர் ஒபாமாவின் இந்திய பயணத்தை முன்னிட்டு, அமெரிக்க அரசு கொடுத்த அழுத்தத்தின் காரணமாக பாகிஸ்தானில் உள்ள ஜமாத் உத் தவா மற்றும் ஹக்கானி நெட்வொர்க் ஆகிய இரண்டு தீவிரவாத அமைப்புகளுக்கு தடைவிதித்துள்ளது பாகிஸ்தான்.

இந்த அமைப்புகளைத் தடை செய்யக் கோரி அமெரிக்கா பல காலமாக வலியுறுத்தி வந்தது, ஆனால் தொடர்ந்து பாகிஸ்தான் தாமதித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், `நல்ல தீவிரவாதிகள்' என்றும், `கெட்ட தீவிரவாதிகள்' என்றும் பாகிஸ்தான் பாகுபாடு காட்டி வருவதை உலகின் பல்வேறு நாடுகளும் விமர்சித்து வந்தன.

இதைத் தொடர்ந்து மும்பை தீவிரவாதத் தாக்குதல் தலைவன் ஹஃபீஸ் சையத்தின் `ஜமாத் உத் தவா' மற்றும் `ஃபலா இ இன்சா னியா பவுண்டேஷன்' ஆகிய அமைப்புகளோடு, 2008ம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் உள்ள இந்தியத் தூதரகத்தின் மீது தாக்குதல் நடத்திய `ஹக்கானி நெட்வொர்க்' என்ற அமைப்புக்கும் பாகிஸ்தான் தடை விதித்துள்ளது.

இதனைத்தொடர்ந்து அவற்றின் சொத்துகள் முடக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT