உலகம்

வடகொரியா மீது அமெரிக்கா புதிய தடை

செய்திப்பிரிவு

வட கொரிய அதிபர் கிம் ஜாங்கைக் கொல்ல சதித் திட்டம் தீட்டுவது போன்று திரைக்கதை அமைந்த சோனி நிறுவனத் தயாரிப்பான ‘தி இன்டர்வியூ' எனும் திரைப்படம் வட கொரியாவால் முடக்கப்பட்டது என்று அமெரிக்கா கூறி வருகிறது. அதனை வட கொரியா மறுத்து வருகிறது. இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை அமெரிக்க அதிபர் ஒபாமா வட கொரியா மீது புதிய தடைகளை விதித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தத் தடை மூலம் வட கொரிய தலைவர்கள் யாரும் அமெரிக்காவில் இருக்கும் தங்கள் சொத்துகளை அணுக முடியாது மேலும் அமெரிக்காவுக்குள் நுழையவும் முடியாது.

SCROLL FOR NEXT