அமெரிக்க துணை அதிபர் ஜோ பிடென் இல்லத்தின் மீது நேற்று மர்ம நபர்கள் சிலர் தாக்குதல் நடத்தியுள்ளனர். ஆனால் இந்தத் தாக்குதலில் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
இதுகுறித்து அமெரிக்க ரகசிய பாதுகாப்புப் படையினர் கூறும்போது, துணை அதிபர் குடியிருக்கும் வீதியில், அவரின் வீட்டை மிக வேகமாக ஒரு வாகனம் கடந்து சென்றதை அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் பார்த்துள்ளனர். அவ்வாறு அவரின் வீட்டைக் கடக்கும்போது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
எனினும், இந்தத் தாக்குதலின் போது பிடென் தன் குடும் பத்தினருடன் வெளியே சென் றிருந்ததால், அதிர்ஷ்டவசமாக உயர் தப்பினார். சுமார் அரை மணி நேரம் கழித்து நியூ கேஸ்டில் சாலையில் உள்ள காவல்துறை சோதனைச் சாவடிக்கு அந்த வாகனம் வந்தபோது அதிலிருந்த வர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து துணை அதிபருக்குப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள் ளது. மேலும், தாக்குதல் தொடர் பாக துணை அதிபர் கருத்து எதுவும் கூறவில்லை.