இலங்கை அதிபர் தேர்தல் பிரச்சாரத்தில் எதிர்கட்சித் தலைவர் மைதிரிபால சிரிசேனா வடபகுதி தமிழர்களுக்கு அன்னியர், ஆனால்,ஒரு அதிபராக தமிழர்களுக்கு நான் அதிக சேவையாற்றியுள்ளேன் என்று கூறியுள்ளார்.
தமிழர்கள் அதிகமாக வசிக்கும் வடக்கு மாகாணத்திற்கு சிவிலியன் உடைகளில் ராணுவ வீரர்களை ராஜபக்ச அனுப்பி தமிழர்கள் வாக்களிப்பதை தடுக்கும் நோக்கம் கொண்டுள்ளதாக எதிர்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்து வரும் நிலையில், தன்னை நம்பி வாக்களிக்குமாறு ராஜபக்ச தமிழர்களை கேட்டுக் கொண்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் அவர் தேர்தல் பிரச்சாரத்தில் உரையாற்றும் போது, “தெரியாத தேவதைக்கு தெரிந்த பிசாசே மேல் என்ற பழமொழி உண்டு” என்று எதிர்கட்சித் தலைவரை விட தானே சிறந்தவர் என்ற தொனியில் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.
“நான் உங்களுக்கு மின்சாரம் அளித்துள்ளேன், உங்களுக்காக அனைத்தையும் மேம்படுத்தியுள்ளேன்” என்றார்.
முக்கியத் தமிழ் கட்சியான தமிழ் தேசிய கூட்டணி, எதிர்கட்சித் தலைவர் மைத்ரிபால சிரிசேனாவை ஆதரிக்க முடிவெடுத்ததையடுத்து யாழ்ப்பாணத்திற்கு ராஜபக்ச பிரச்சாரம் செய்ய வருகை தந்துள்ளார்.
இந்நிலையில், தமிழ் தேசிய கூட்டணியின் செயல்பாடுகளையும் அவர் தாக்கிப் பேசினார்: “உங்களுக்கு சேவையாற்ற கொடுத்த பணத்தை அவர்கள் பயன்படுத்தவில்லை” என்றார்.
தமிழர்கள் வாக்கெண்ணிக்கை எவ்வளவு குறைவாக விழுகிறதோ அந்த அளவுக்கு ராஜபக்சவின் வெற்றியும் தீர்மானிக்கப்படும் என்பதால் தமிழர்கள் வாக்களிப்பதைத் தடுக்க ராணுவ வீரர்களை சிவிலியன் உடைகளில் வடக்கு பகுதிகளில் அனுப்பியுள்ளதாக எதிர்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.