உலகம்

பாலியல் புகாரில் சிக்கிய வங்கதேச கிரிக்கெட் வீர்ர் ரூபல் ஹுசைனுக்கு சிறைத் தண்டனை

செய்திப்பிரிவு

வங்கதேச நடிகை ஒருவர் கொடுத்த பாலியல் புகாரில் கிரிக்கெட் வீரர் ரூபல் ஹுசைனுக்கு சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது டாக்கா நீதிமன்றம்.

திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றியதாக நடிகை ஒருவர் அளித்த புகாரில் டாக்கா நீதிமன்றம் வங்கதேச கிரிக்கெட் வீர்ர் ரூபல் ஹுசைனுக்கு சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

வரவிருக்கும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளுக்கான வங்கதேச அணி தேர்வு செய்த 15 வீரர்கள் கொண்ட அணியில் வேகப்பந்து வீச்சாளரான ரூபல் ஹுசைன் இடம்பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

டிசம்பர் 13-ஆம் தேதி நடிகை ஒருவர் ரூபல் ஹுசைன் தன்னை ஏமாற்றியதாக மிர்பூர் காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்தார்.

இதனையடுத்து ரூபல் முன் ஜாமின் செய்தார். இதனால் 15-ஆம் தேதி கோர்ட் அவருக்கு 4 வாரங்கள் ஜாமின் அளித்திருந்தது.

இந்நிலையில் இன்று காலை ஜாமின் கேட்டு ரூபல் ஹுசைன் நீதிமன்றத்தில் சரணடைந்தார். ஆனால் குழந்தைகள் மற்றும் பெண்கள் அடக்குமுறை தடுப்புச் சட்டத்தின் கீழ் நீதிபதி முகமது அன்வர் சதத், ரூபல் ஹுசைனை சிறையிலடைக்க உத்தரவிட்டார்.

நடிகையும், மாடல் அழகியுமான நஸ்னின் அக்தர் ஹேப்பி, தனது புகாரில், ரூபல் ஹுசைன் தன்னை திருமணம் செய்துகொள்வதாக ஆசைகாட்டி பலமுறை தன்னுடன் உடலுறவு கொண்டதாகவும், ஆனால் திருமணம் செய்து கொள்ள மறுத்ததாகவும் கூறியிருந்தார்.

நண்பர்கள் மூலம் ரூபல் ஹுசைனுடன் பழக்கம் ஏற்பட்டதாகவும், பிறகு சமூக வலைத்தளம் மற்றும் செல்பேசி மூலம் தொடர்பு வலுப்பெற்றது என்றும் அவர் முன்னதாக கூறியிருந்தார்.

மிர்புர் காவல் நிலைய துணை ஆய்வாளர் மசூத் பர்வேஸ் கூறும் போது, “நடிகை ஹேப்பி, ரூபல் ஹுசைனுக்கு எதிராக பாலியல் பலாத்கார புகாரை அளித்தார்” என்று கூறினார்.

கிரிக்கெட் வீர்ர் ரூபல் ஹுசைன் நடிகை ஹேப்பியின் புகார்களை மறுத்துள்ளார்.

2013ஆம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிராக ஒருநாள் போட்டியில் ஹேட்ரிக் எடுத்து சாதனை புரிந்தவர் ரூபல் ஹுசைன் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT