வங்கதேச முன்னாள் பிரதமர் கலீதா ஜியா மீது ஏற்கெனவே நிதி முறைகேடு தொடர்பாக வழக்குகள் பதிவாகியுள்ள நிலையில், கலவரத்தைத் தூண்டியதாக மற்றொரு வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது.
கோமிலா மாவட்டத்தில், உள்ள சவுத்தாகிராம் பகுதியில் வேன் ஒன்று எரிக்கப்பட்டது. இச்சம்பவத்தை கலீதா ஜியா தூண்டி விட்டதாகக் கூறி அவர் மீதும் வங்கதேச தேசியக் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் 31 பேர் மீதும் சவுத்தாகிராம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கலீதா ஜியா தலைவராக உள்ள வங்கதேச தேசிய கட்சி சார்பில் அரசுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இதனால், கடந்த 5-ம் தேதி முதல் ஆங்காங்கு சில வன்முறை சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. தீ வைப்புச் சம்பவங்களால் இதுவரை 20 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.