ஏழைகள் மீதான பரிவு கம்யூனிஸம் அல்ல, அது கிறிஸ்தவம் என்று போப் ஆண்டவர் பிரான்சிஸ் விளக்கம் அளித்துள்ளார்.
தற்போதைய போப் ஆண்டவர் பிரான்சிஸ் கம்யூனிஸத்தில் ஈடுபாடு மிக்கவர், அதன்படியே அவர் செயல்பட்டு வருகிறார் என்று சிலர் குற்றம் சாட்டி வருகின்றனர். இதனை மறுத்து போப் ஆண்டவர் கூறியிருப்பதாவது: வசதி படைத்த வர்களை வேதாகமம் குறை சொல்லவில்லை. அதேநேரம் ஏழைகளின் கூக்குரலுக்கு இரங்கா தவர்களை கடுமையாகக் கண்டிக் கிறது.
வேதாகமத்தில் மத்தேயு எழுதிய அதிகாரத்தில், ‘நான் பசியாய் இருந்தேன், நீங்கள் உணவு கொடுத்தீர்கள், தாகமாய் இருந்தேன், என் தாகத்தை தணித்தீர்கள், அந்நியனாக இருந் தேன், என்னை ஏற்றுக் கொண் டீர்கள், ஆடையின்றி இருந்தேன், நீங்கள் ஆடை அணிவித்தீர்கள், நோயுற்றிருந்தேன், என்னை கவனித்துக் கொண்டீர்கள், சிறையில் இருந்தேன், என்னை தேடி வந்தீர்கள், ஏழைகளில் ஒருவருக்கு நீங்கள் எதை செய்தீர்களோ அதை எனக்கே (கடவுள்) செய்தீர்கள்’ என கூறப்பட்டுள்ளது. ஏழைகள் துன்பத்தில் இருக்கும்போது அவர்கள் மீது பரிவு காட்டுவது கம்யூனிஸம் அல்ல, அது கிறிஸ்தவம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
போப் ஆண்டவரின் பொருளாதார கொள்கைகள், சமூக சிந்தனைகள் ஆகியவை குறித்து ஆய்வு செய்து ‘திஸ் எக்னாமி கில்ஸ்’ என்ற பெயரில் புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது. அந்தப் புத்தகத்தை தொகுத்த வாடிகன் நிருபர்களுக்கு போப் ஆண்டவர் அளித்த பேட்டியில் இவ்வாறு தன்னிலை விளக்கம் அளித் துள்ளார்.