உலகம்

சீனாவில் பள்ளி சிறுமிகளின் கருமுட்டைகள் விற்பனை: அதிர்ச்சி தகவல்

பிடிஐ

சீனாவில் பள்ளி சிறுமிகள் மற்றும் இளம்பெண்களிடம் பணத்தாசை காண்பித்து அவர்களின் கருமுட்டைகளை குழந்தைப்பேறு இல்லாத தம்பதிகளுக்கு சில குழுக்கள் விற்று லாபம் சம்பாதிப்பதாக அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது.

சீனாவின் உள்நாட்டு செய்தி தொலைக்காட்சி சேனல் இது தொடர்பான அதிர்ச்சி தகவலை வெளியிட்டது. "கருமுட்டைகளுக்கு சீன மதிப்பில் பல ஆயிரக்கணக்கான பணம் தரப்படுகிறது. பணத்துக்கு ஆசைப்பட்டு கருமுட்டைகளை பள்ளிச் சிறுமிகள் குழந்தைப்பேரு இல்லாத தம்பதிகளுக்கு விற்பனை செய்கின்றனர்.

ஆனால் இந்த நூதன வியாபாரத்தில் 20 வயதுடைய பெண்களை குறிவைத்து, கருமுட்டைகள் பெறப்படுகிறது" என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மிகவும் அபாயகரமான இந்த நூதன விற்பனையில் மருத்துவ ரீதியிலான விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை என்றும் இதனால் அபாயகரமான விளைவுகள் ஏற்படும் என்று மருத்துவர்கள் கவலைத் தெரிவித்துள்ளனர்.

சீனாவில் சுமார் 500 லட்சத்துக்கு அதிகமானோர் குழந்தைப் பேறு அடைய முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஆய்வு குறிப்பு தெரிவிக்கிறது. இதனால் கருமுட்டைகளின் விற்பனை அங்கு வர்த்தக ரீதியில் பிரபலமடைந்து வருகிறது.

இது தொடர்பான மருத்துவ அறிக்கையை அரசு சமீபத்தில் வெளியிட்டிருந்த நிலையில், கள்ளச் சந்தையில் கருமுட்டைகள் விற்பனை செய்யப்படுவது குறித்து சீன அரசு கண்காணித்து அதன் பேரில் நடவடிக்கை எடுத்து வருகிறது.

SCROLL FOR NEXT