உலகம்

ஆம்புலன்ஸ் சேவை தொடங்கியது ஜமாத் உத் தவா :பாகிஸ்தான் நடவடிக்கையால் பாதிப்பில்லை

பிடிஐ

சட்டவிரோத தீவிரவாத அமைப்பான ஜமாத் உத் தவா மீது பாகிஸ்தான் அரசு பொருளாதாரத் தடை விதித்துள்ள நிலையிலும் அதைப் பொருட்படுத்தாது கராச்சியில் ஆம்புலன்ஸ் சேவையைத் தொடங்கியுள்ளது அந்த அமைப்பு.

மும்பை தாக்குதல் முக்கிய குற்றவாளியான ஹபீஸ் சயீத் தலைமையிலான ஜமாத் உத் தவா அமைப்பின் கட்டுப்பாட்டில் ஃபலா இ இன்சனியாத் அறக் கட்டளை செயல்பட்டு வருகிறது.

இந்த அறக்கட்டளை சார்பில் நேற்று முன்தினம் ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் ஐ.நா. சபையால் பயங்கரவாதி என அறிவிக்கப்பட்ட ஹபீஸ் சயீத்தான் இச்சேவையைத் தொடங்கி வைத்தார். இந்த அமைப்பு சார்பில் 15 ஆம்புலன்ஸ்கள் கராச்சி நகரில் இயக்கப்படவுள்ளன.

எங்கள் அமைப்பு நலத்திட்டங் களை மேற்கொள்வதற்கு பாகிஸ் தான் அரசு எவ்வித கட்டுப்பாடு களையும் விதிக்கவில்லை. இது போன்ற திட்டங்களை நாங்கள் கைவிடப்போவதில்லை. நாடு முழுவதும் 118 நகரங்களில் இச் சேவையை எங்கள் அமைப்பு செயல்படுத்தி வருகிறது எனத் தெரி வித்தார். ஜமாத் உத்தவா அமைப்பும் ஃபலா இ இன்சனியாத் அறக் கட்டளையும் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் முகாம் அமைத்து, மக்கள் நலப்பணி என்ற பெயரில் நிதி திரட்டி வருகின்றன.

முன்னதாக, ஜமாத் உத் தவா மற்றும் ஃபலா இ இன்சனியாத் அறக்கட்டளை மீது பாகிஸ்தான் அரசு பொருளாதாரத் தடை விதித்து, அதன் சொத்துகளை முடக்கியது. ஆனால், பாகிஸ் தான் அரசு வெறும் அறிவிப்புடன் நின்றுவிட்டதையே, ஜமாத் உத் தவா அமைப்பின் ஆம்புலன்ஸ் சேவை தொடக்க விழா காட்டு கிறது.

மும்பை தாக்குதல் சம்பவம் தொடர்பாக விசாரிக்க ஹபீஸ் சயீத்தை ஒப்படைக்கக் கோரி இந்தியா தொடர்ந்து வலி யுறுத்தி வருவது குறிப்பிடத் தக்கது.

SCROLL FOR NEXT