உலகம்

பெஷாவரில் இன்று முதல் மீண்டும் பள்ளிகள் திறப்பு

ஏபி

பாகிஸ்தானில் உள்ள பெஷாவர் ராணுவப் பள்ளி மீது தாலிபான்கள் தாக்குதல் நடத்தி கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆன நிலையில் அந்தப் பள்ளி மீண்டும் இன்று முதல் செயல்பட தொடங்கியது.

பெஷாவரில் கடந்த ஆண்டு டிசம்பர் 16-ஆம் தேதி ராணுவப் பள்ளியில் புகுந்து தாலிபான்கள் கொலைவெறித் தாக்குதல் நடத்தினர். இதில் 132 குழந்தைகள் உட்பட 141 பேர் பலியாகினர்.

உலகையே சோகத்தில் ஆழ்த்திய மிக மோசமான தாக்குதல் சம்பவம் நடந்து கிட்டத்தட்ட ஒரு மாதம் அக உள்ள நிலையில் தாக்குதலுக்கு உள்ளான ராணுவப் பள்ளி மீண்டும் இன்று (திங்கட்கிழமை) முதல் செயல்பட தொடங்கியுள்ளது.

அத்துடன் ராணுவ வீரர்கள் பலரின் குழந்தைகள் படிக்கும் மற்ற பள்ளிகளும் இன்று முதல் திறக்கப்பட்டுள்ளன.

SCROLL FOR NEXT