உலகம்

8 தீவிரவாதிகளுக்கு விரைவில் மரண தண்டனை நிறைவேற்றம்: பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவு

ஐஏஎன்எஸ்

பாகிஸ்தானில் 8 தீவிரவாதிகளின் மரண தண்டனையை நிறைவேற்ற அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன்படி வரும் 7, 13, 14, 15 ஆகிய தேதிகளில் 8 பேருக்கும் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது.

மரண தண்டனை நிறைவேற்றப் பட உள்ளவர்களின் பட்டியலில் அல்-காய்தா அமைப்பைச் சேர்ந்த ஜுல்பிகர் அலியும் ஒருவர் ஆவார். கடந்த 2003-ம் ஆண்டு கராச்சியில் உள்ள அமெரிக்க துணைத் தூதரகம் அருகே 2 போலீஸாரைக் கொன்ற இவருக்கு 2004-ம் ஆண்டு மார்ச் மாதம் மரண தண்டனை விதிக்கப்பட்டது.

லஷ்கர்-இ-ஜாங்வி அமைப் பைச் சேர்ந்த முகமது ஷாஹித் ஹனிப், முகமது தல்ஹா ஹுசைன், கலீல் அகமது, முகமது சயீத் ஆகிய 4 பேரும் இந்தப் பட்டியலில் உள்ளனர். பாதுகாப்பு அமைச்சக அதிகாரி, ஓய்வுபெற்ற காவல் துறை துணை கண்காணிப்பாளர் மற்றும் அவரது மகன் உள்ளிட்டவர்களை கொலை செய்த வழக்கில் இவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

இதுதவிர சிறுவனை கடத்திக் கொலை செய்த வழக்கில் தண் டனை பெற்ற பெஹ்ரம் கான், ஷப்கத் ஹுசைன், 3 பேரை கொலை செய்த வழக்கில் தண்டனை பெற்ற அகமது ஆகி யோருக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது.

பாகிஸ்தானில் தீவிரவாதிகள் பதுங்கியுள்ள இடங்களில் ராணுவத்தினர் தொடர்ந்து தாக்கு தல் நடத்தி வருகின்றனர். இதனால் ஆத்திரமடைந்த தீவிரவாதிகள், பெஷாவர் நகரில் உள்ள ஒரு ராணுவ பள்ளிக்கூடத்தில் திடீர் தாக்குதல் நடத்தினர். தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் தீவிரவாதி கள் கடந்த டிசம்பர் மாதம் நடத்திய இந்த தாக்குதலில் 132 குழந்தைகள் உட்பட சுமார் 150 பேர் பலியாயினர். இதற்கு உலகெங்கும் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து தீவிரவாத வழக்குகளில் மரண தண்டனையை நிறை வேற்ற விதிக்கப்பட்டிருந்த தடையை அரசு ரத்து செய்தது. தீவிரவாதிகளுக்கு விரைவில் மரண தண்டனை நிறைவேற்று வோம் என்று பிரதமர் நவாஸ் ஷெரீப் உறுதியளித்தார். அதன் பிறகு இது வரை 7 தீவிரவாதிகளுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப் பட்டுள்ளது. எனினும் மரண தண்டனைக்கு மனித உரிமை அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

SCROLL FOR NEXT