உலகம்

உபேர் கால் டாக்ஸி நிறுவனம் மீது அமெரிக்காவில் வழக்கு

பிடிஐ

அமெரிக்காவின் ஒரேகான் மாகாணத்தில் உள்ள சிட்டி ஆப் போர்ட்லாண்டில் உபேர் கால் டாக்ஸி சட்டவிரோதமாக செயல்பட்டு வருவதாக குற்றம் சாட்டி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

கலிபோர்னியாவில் ஏற்கெனவே சேவையை அளித்து வரும் உபேர் கால் டாக்ஸி, கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு ஒரேகானின் சிட்டி ஆப் போர்ட் லாண்டில் தனது சேவையை தொடங்கியது. இந்நிலையில், இந்த சேவையை அளிப்பதற்கு உரிய அனுமதியை அந்நிறுவனம் பெறவில்லை எனத் தெரிகிறது.

இதையடுத்து உபேர் கால் டாக்ஸி மீது சிட்டி ஆப் போர்ட் லாண்ட் நிர்வாகம் வழக்கு தொடுத் துள்ளது. நகரில் கால் டாக்ஸி நடத்துவதற்கான விதிமுறை களை உபேர் கால்டாக்ஸி பின்பற்றவில்லை. சட்டப்பூர்வமான அனுமதியை பெறும் வரை, இந்த கால் டாக்ஸியை செயல் பட அனுமதிக்கக் கூடாது என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சிட்டி ஆப் போர்ட்லாண்ட் மேயர் சார்லி ஹேல்ஸ் கூறும்போது, “பொது மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்நடவடிக்கையை நாங்கள் எடுத்துள்ளோம். கால் டாக்ஸி நிறுவனங்கள் மட்டுமல்ல, ஓட்டல்கள், கட்டுமான நிறு வனங்கள் உள்ளிட்டவையும் விதிமுறைகளை மதித்து நடக்க வேண்டும்.

விதிமுறையை பின்பற்றி நடக்க வேண்டும் என்று உபேர் கால் டாக்ஸி நிறுவனத்துக்கு அறிவுறுத்தினோம். அவர்கள் அதற்கு ஒத்துக்கொள்ளவில்லை. எனவே, நீதிமன்றத்தை நாடியுள்ளோம்” என்றார்.

போக்குவரத்து ஆணையர் ஸ்டீவ் கூறும்போது, “உரிய அனுமதி யின்றி சேவையை தொடங்கி யதற்காக உபேர் கால் டாக்ஸி நிறுவனம் மற்றும் ஓட்டுநர்கள் மீது சிவில் மற்றும் கிரிமினல் குற்ற நடவடிக்கைகளை எடுக்க முடிவு செய்துள்ளோம்” என்றார்.

இந்த உபேர் கால் டாக்ஸி நிறுவனத்துக்கு அண்மையில் டெல்லியிலும் தடை விதிக்கப் பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிறுவனத்தின் டாக்ஸியில் பயணம் செய்த பெண் ஒருவரை ஓட்டுநர் பலாத்காரம் செய்துவிட்ட தாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டது.

SCROLL FOR NEXT