உலகம்

நேபாளத்தில் பஸ் கவிழ்ந்து 17 பேர் பலி

பிடிஐ

நேபாளத்தில் நேற்று பஸ் கவிழ்ந்து 17 பேர் உயிரிழந்தனர். 50-க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர். தலைநகர் காத்மாண்டில் இருந்து 400 கி.மீட்டர் தொலைவில் உள்ள போக்ஹரா காடா நகரின் மலைப் பகுதியில் 67 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த பஸ் ஒரு வளைவில் திரும்பியபோது மலைச்சரிவில் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் 17 பேர் உயிரிழந்தனர். 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அவர்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

SCROLL FOR NEXT