குற்றவாளிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றுவதை நிறுத்தி வைக்க வேண்டும் என்று பாகிஸ்தான் அரசை ஐக்கிய நாடு கள் (ஐ.நா.) வலியுறுத்தி உள்ளது.
இதுதொடர்பாக ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்புடன் கடந்த 25-ம் தேதி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாக அவரது செய்தித் தொடர்பாளர் தெரிவித் துள்ளார்.
இவர்களுக்கிடையிலான உரையாடல் குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பெஷாவர் பள்ளிக்கூடத்தின் மீது நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பான் கி மூன் இரங்கல் தெரிவித்தார். குற்றவாளிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றுவதை நிறுத்தி வைக்குமாறும் மரண தண் டனைக்கு மீண்டும் இடைக் காலத் தடை விதிக்குமாறும் நவாஸ் ஷெரீப் பிடம் வலியுறுத்தினார்” என கூறப்பட்டுள்ளது.
மரண தண்டனையை கைவிட சர்வதேச நாடுகளிடம் ஆதரவு பெருகி வரும் நிலையில், பாகிஸ் தான் மீண்டும் மரண தண்ட னையை நிறைவேற்றி வருவதற்கு, ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் தலைவர் ஜெய்த் ராத் அல் ஹுசைன் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு கண்டனம் தெரிவித்திருந்தார்.
கடந்த சில வாரத்துக்கு முன்பு பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் உள்ள ராணுவ பள்ளிக்கூடத்தில் புகுந்த தலிபான் தீவிரவாதிகள், நூற்றுக்கணக்கான குழந்தைகள் உட்பட மொத்தம் சுமார் 150 பேரை சுட்டுக் கொன்றனர்.
இதையடுத்து, தீவிரவாதி களுக்கு எதிரான நடவடிக்கையை தீவிரப்படுத்தும் வகையில் மரண தண்டனைக்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடையை 6 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ் தான் அரசு விலக்கிக் கொண்டது. இதையடுத்து சிலருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. மேலும் பலருக்கு தண்டனையை நிறைவேற்ற திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.