உலகம்

பாகிஸ்தான் தீவிரவாதிகள் 28 பேர் சுட்டுக்கொலை

செய்திப்பிரிவு

பெஷாவர் தாக்குதலுக்குப் பிறகு தீவிரவாதிகள் மீதான தாக்குதலை பாகிஸ்தான் தீவிரப்படுத்தியுள்ளது.

வடமேற்கு பழங்குடியின பகுதியில் பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் ஜெட் போர் விமானங்கள் மூலம் நடத்திய வான்வழி தாக்குதலில் 28 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். அவர்களது பதுங்கிடங்களும் அழிக்கப்பட்டன.

பெஷாவர் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட உமர் நரேயும் இத்தாக்குதலில் கொல்லப்பட்டதாக தொலைக்காட்சி செய்திகளில் கூறப்படுகிறது.

இருப்பினும் இதை பாகிஸ்தான் ராணுவம் உறுதிப்படுத்தவில்லை.

SCROLL FOR NEXT