உலகம்

ஆஸி தாக்குதலில் உயிர் தப்பிய இந்தியப் பொறியாளர் ஆந்திராவைச் சேர்ந்தவர்

செய்திப்பிரிவு

ஆஸ்திரேலியாவில் தீவிரவாதியிடம் சிக்கி மீண்ட இந்தியர் விஸ்வகாந்த் அங்கிரெட்டி ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் கங்கிரெட்டி பாளையம் பகுதியை சேர்ந்தவர்.

பிர்லா அறிவியல் தொழில்நுட்ப கல்லூரியில் படித்த அவர், கடந்த 2 ஆண்டுகளாக ஆஸ்திரேலியாவில் உள்ள இன்போசிஸ் அலுவலகத்தில் பணியாற்றி வந்தார். அவருக்கு திருமணமாகி மனைவி, குழந்தை உள்ளனர். அவர் மீட்கப்பட்டதால் இந்தியாவில் உள்ள அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் நிம்மதியடைந்துள்ளனர்.

இந்தச் சம்பவத்தில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த மேலும் ஒரு இந்தியரும் உயிர் தப்பியுள்ளார்.

SCROLL FOR NEXT