உலகம்

மருத்துவமனையில் சீனியர் புஷ் அனுமதி

செய்திப்பிரிவு

முன்னாள் அமெரிக்க அதிபர் எச்.டபிள்யு. புஷ் (சீனியர் புஷ்) நேற்று முன்தினம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

90 வயதான சீனியர் புஷ் டெக்ஸாஸ் மாநிலத்தின் ஹூஸ்டன் நகரில் வசித்து வருகிறார். சுவாசிப் பதில் சீரற்ற நிலை காணப்பட்ட தால் முன்னெச்சரிக்கையாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார். மெத்தாடிஸ்ட் மருத்துவ மனை மருத்துவர்கள் அவரது உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

இதே மருத்துவமனையில் 2 மாத சிகிச்சைக்குப் பிறகு கடந்த ஜனவரி 2013-ல் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். மார்புச்சளி மற்றும் பிற பிரச்சினைகளுக்கான அப்போது அவர் சிகிச்சை பெற்றார்.

முதுமை காரணமாக புஷ்ஷால் நடக்க முடியவில்லை.் கடந்த நவம்பர் மாதம் டெக்ஸாஸ் ஏ&எம் பல்கலைக்கழக விழாவில் அவர் தனது மகன் ஜார்ஜ் டபிள்யு புஷ்ஷுடன் (இவரும் முன்னாள் அமெரிக்க அதிபர்) வீல்சேரில் வந்து கலந்துகொண்டார்.

SCROLL FOR NEXT