சீனாவில் நிலக்கரிச் சுரங்கத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி 13 பேர் பலியாகினர். மேலும் 14 பேர் சுரங்கத்தில் சிக்கியுள்ளனர்.
சீனாவின் தென் மேற்கு பகுதியில், யுனான் மாகாணத்தில் உள்ள நிலக்கரிச் சுரங்கத்தில் 56 பேர் பணியாற்றிக் கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென வாயுக் கசிவு ஏற்பட்டது தொடர்ந்து வெடி விபத்தும் நடந்துள்ளது. இதில் 13 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 42 பேர் சுரங்கத்தில் இருந்து தப்பித்துவிட்டனர். எஞ்சியுள்ள 14 பேரை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.
இது குறித்து சினுவா செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், விபத்து நடைபெற்ற சுரங்கம் தனியாருக்குச் சொந்தமானது என்றும் முறையாக உரிமம் பெற்றே சுரங்கம் வெட்டி எடுக்கும் பணி நடைபெற்று வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.