உலகம்

விடுதலைப்புலிகளிடம் இருந்து மீட்கப்பட்ட இலங்கை தமிழர்களின் நகைகளை திரும்ப ஒப்படைத்தார் ராஜபக்ச

பிடிஐ

வட இலங்கையை விடுதலைப் புலிகள் நிர்வகித்தபோது, அப்பகுதி மக்களிடம் இருந்து கட்டாயப்படுத்தி பெறப்பட்டதாக கூறப்படும் தங்கம் மற்றும் நகைகளை அதிபர் ராஜபக்ச திரும்ப ஒப்படைத்தார்.

நகைகளை பறிகொடுத்த மற்றும் விடுதலைப்புலிகள் நடத்தி வந்த வங்கிகளில் டெபாசிட் செய் திருந்த வட இலங்கை தமிழர்கள் நேற்று முன்தினம் அதிபரின் அதிகாரப்பூர்வ இல்லத்துக்கு வரவழைக்கப்பட்டனர். பின்னர் அவர்களிடம் தங்கம் மற்றும் நகைகளை ராஜபக்ச நேரடியாக ஒப்படைத்தார்.

இதுகுறித்து ராஜபக்ச கூறும் போது, “தங்கத்தை விட விலை மதிப்புள்ள பொருள்கள் அதிகம் வழங்கினேன். விடுதலைப்புலி களுடனான போரை முடிவுக்கு கொண்டுவந்ததன் மூலம் அவர்களுக்கு சுதந்திரத்தை உறுதி செய்துள்ளேன்” என்றார்.

அதிபர் மாளிகை அதிகாரிகள் கூறும்போது, “மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய பகுதிகளில் இருந்து சுமார் 1,960 பேர் நகைகளை பெற்றுக்கொண்டனர். இவர்களில் அதிகபட்சமாக கிளிநொச்சியில் இருந்து 1,187 பேர் நகைகளை திரும்பப் பெற்றனர்” என்றார்.

இலங்கையின் மூத்த ராணுவ அதிகாரி ஒருவர் கூறும்போது, “இந்த நகைகளுக்கு உண்மை யான உரிமையாளர்களை அடையாளம் காணவேண்டியிருந் ததால், சற்று கூடுதல் அவகாசம் எடுத்துக்கொள்ள நேரிட்டது” என்றார். இலங்கையில் வரும் ஜனவரி 8-ம் தேதி அதிபர் தேர்தல் நடை பெறவுள்ள நிலையில், சிறுபான்மை தமிழர்களின் ஆதரவை பெறும்வகையில் ராஜபக்ச இந்நடவடிக்கை மேற்கொண்ட தாக தெரிகிறது.

இந்தத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் போட்டியிடும் முன்னாள் சுகாதார அமைச்சர் மைத்ரிபால ஸ்ரீசேனா, ராஜபக்சவுக்கு சவாலாக உருவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. ஆளும் கூட்டணியில் இருந்து புத்த பிக்குகள் தலைமையிலான தேசிய பாரம்பரிய கட்சி (ஜே.என்.யு) விலகியது ராஜபக்சவுக்கு ஏற்பட்டுள்ள பின்னடைவாக கருதப்படுகிறது.

SCROLL FOR NEXT