உலகம்

பாதுகாப்பில் கூடுதல் கவனம் உபேர் உறுதி

செய்திப்பிரிவு

உலகம் முழுவதும் 250 நகரங்களில் சேவையை வழங்கி வரும் கலிபோர்னியாவை தலைமையிடமாகக் கொண்ட உபேர் வாடகைக்கார் நிறுவனம், பயணிகளின் பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்துவோம் என உறுதியளித்துள்ளது.

அண்மையில் டெல்லியில் உபேர் நிறுவனத்தின் வாடகைக் காரில் பயணம் செய்த இளம் பெண் அக்காரின் ஓட்டுநரால் பலாத்காரம் செய்யப்பட்டார். இதையடுத்து அந்நிறுவனத்தின் சேவையை முடக்கி டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், பயணிகளின் பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்தப்போவதாக உபேர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT