உலகம்

ஜாவா கடலில் விமான பாகங்கள்?- மோசமான வானிலையில் தேடல் தொடர்கிறது

ஏபி

மாயமான ஏர்ஏசியா விமானத்தை தேடும் நடவடிக்கையின்போது, நங்கா தீவு அருகே சில பாகங்கள் காணப்பட்டதாக கடற்படைத் தள அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது குறித்து ஜகார்தா கடற்படைத் தள காமாண்டர் கூறுகையில், "ஆஸ்திரேலிய ஓரியான் போர் விமானம் நங்கா தீவு அருகே சந்தேகத்துக்குரிய பாகங்கள் தென்பட்டுள்ளதாக தகவல் அனுப்பியுள்ளது. இந்த பாகங்கள் விமானம் மாயமான மத்திய கலிமந்தன் பகுதியிலிருந்து சுமார் 160 கிமீ தூரத்தில் காணப்பட்டதாக தெரிகிறது.

ஜாவா கடற்பகுதியில் தற்போது மோசமான வானிலை நிலவுகிறது. அதனால் தென்பட்ட பாகங்கள் மாயமான விமானத்தின் பாகங்கள் தான் என்று உறுதியாக கூற முடியவில்லை.

ஆனால் நாங்கள் அந்த வழியில் எங்களது தேடலை மாற்றிக்கொண்டுள்ளோம். அங்கு தேடல் சிரமமாக தான் உள்ளது" என்றார்.

SCROLL FOR NEXT