உலகம்

ஆசியாவில் சிறந்தவர் நரேந்திர மோடி சிங்கப்பூர் நாளிதழ் விருது

பிடிஐ

சிங்கப்பூரின் ‘தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்’ நாளிதழ் 2014-ம் ஆண்டில் ஆசியாவின் மிகச்சிறந்த நபராக பிரதமர் நரேந்திர மோடியைத் தேர்வு செய்துள்ளது. கடந்த ஆண்டு இவ்விருது சீன அதிபர் ஜீ ஜின்பிங் மற்றும் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே ஆகியோருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது.

‘பிரதமர் பதவிக்குப் புதியவராக இருந்தாலும் மோடி ஏற்கெனவே, ஆசியாவில் முத்திரை பதித்து விட்டார். அண்டை நாடுகளை அணுகுதல், சீன அதிபர் ஜி ஜின்பிங், ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அபோட் உள்ளிட்ட சர்வதேச தலைவர்களை இந்தியாவுக்கு வரவேற்றுள்ளார்” என அப்பத்திரிகையை வெளியிடும் நிறுவனமான சிங்கப்பூர் பிரஸ் ஹோல்டிங்ஸ் தெரிவித்துள்ளது.

தனது தேசம் மீண்டும் ஒளிர்வது குறித்து உள்நாட்டிலும் உலக அளவிலும் ஆச்சரியத்தை விதைத்துள்ளார். தனக்குக் கிடைத்துள்ள பெரும்பான்மையைப் பயன்படுத்தி அவர் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் நம்பிக்கையின் அடையாளம். அனைத்திலும் வெற்றி கிடைக்க, அவருக்கும் இந்தியாவுக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்” என ‘தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்’ தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT