உலகம்

ஆயுத வர்த்தகத்தை நெறிப்படுத்தும் உலக ஆயுத ஒப்பந்தம் அமலுக்கு வந்தது

செய்திப்பிரிவு

உலக அளவில் 8,500 கோடி டாலர் (சுமார் ரூ.5 லட்சத்து 10 ஆயிரம் கோடி) மதிப்பில் நடைபெறும் ஆயுத வர்த்தகத்தை நெறிப்படுத் தும் வகையிலான தனித்துவம் மிகுந்த உலக ஆயுத ஒப்பந்தம் நேற்றுமுதல் அமலுக்கு வந்தது. உலக ஆயுத வர்த்தக ஒப்பந்தம் ஐ.நா. பொதுச்சபையில் கடந்த ஆண்டு ஏப்ரலில் நிறைவேறியது. ஆயுதம் ஏற்றுமதி செய்யும் நாடு கள் சட்டத்துக்கு உட்பட்டு நடக்க வகை செய்யும் முதல் சர்வதேச ஒப்பந்தம் இதுவாகும். மனிதப்படுகொலை செய்யவும், மனித குலத்துக்கு எதிரான குற்றம் இழைக்கவும், போர்க்குற்றம் புரியவும் ஆயுதங்களை பயன் படுத்தக்கூடிய நாடுகள் என்று தெரியவந்தால் அந்நாடுகளுக்கு ஆயுதங்களை ஏற்றுமதி செய்வதை இந்த உடன்பாடு தடை செய்கிறது. டிசம்பர் 23-ம் தேதி நிலவரப்படி இந்த உடன்பாட்டை 60 நாடுகள் ஏற்றுக்கொண்டுள்ளன. 130 நாடுகள் தாங்களும் ஏற்றுக்கொள்ளத் தயார் என்று அறிவித்து கையெழுத் திட்டுள்ளன. இந்த உடன்பாடு தொடர்பான தீர்மானம் கடந்த ஆண்டு வாக் கெடுப்புக்கு வந்தபோது, இந்தியா உள்ளிட்ட 23 நாடுகள் வாக்கெடுப் பில் பங்கேற்கவில்லை. வரைவு உடன்பாட்டில் பயங்கரவாதி களுக்கு ஆயுதம் சென்றடைவதை தடுக்கும் வகையிலான பிரிவுகள் வலுவற்று இருப்பதாக கூறி இந் நாடுகள் வாக்கெப்பை புறக் கணித்தன. பிரதான ஆயுத உற்பத்தி நாடு களான ரஷ்யா, சீனா, இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்டவை இந்த உடன்பாட்டில் இன்னும் கையெழுத்திடவில்லை. பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் இந்த உடன் பாட்டை ஏற்றுக்கொண்டுள்ளன. அமெரிக்கா இந்த உடன்பாட்டை ஏற்றுக்கொண்டு கையெழுத்திட்டாலும், அந்நாட்டின் செனட் அவை இன்னும் ஒப்புதல் தரவில்லை.இந்த உடன்பாடு அமலுக்கு வந்ததை சர்வேதச மனித உரிமை அமைப்புகள் வரவேற்றுள்ளன.

SCROLL FOR NEXT