உலகம்

ஆப்கனில் மனித வெடிகுண்டு தாக்குதல்: 9 பேர் பலி

செய்திப்பிரிவு

ஆப்கானிஸ்தானில் மனித வெடிகுண்டு தாக்குதலில் 9 பேர் கொல்லப்பட்டனர். 18 பேர் படுகாயமடைந்தனர்.

பக்லான் மாகாணத்தில் இறுதி ஊர்வல நிகழ்ச்சி ஒன்றின்போது மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், அதில் 2 போலீஸ்காரர்கள் உள்பட 9 பேர் பலியானதாகவும், மேலும் 18 பேர் படுகாயமடைந்ததாகவும் போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

          
SCROLL FOR NEXT