சிரியாவில் அரசுக்கு எதிராக போரில் ஈடுபட்டுள்ள ஐஎஸ் தீவிரவாதிகள் கடந்த 6 மாதத்தில் தங்களிடம் பிடிபட்ட 1,878 பேரை சுட்டுக் கொன்று மரண தண்டனையை நிறைவேற்றியுள்ளனர். இதில் பெரும்பாலானவர்கள் பொதுமக்கள். பிரிட்டனைச் சேர்ந்த சிரியா மனித உரிமை கண்காணிப்பு அமைப்பு இத்தகவலை வெளியிட் டுள்ளது.
இஸ்லாமிய சட்டப்படி அரசு அமைக்கும் நோக்கத்துடன் ஐஎஸ் தீவிரவாத அமைப்பு சிரியாவில் அரசுக்கு எதிராக போரில் ஈடுபட்டு வருகிறது. இராக் மற்றும் சிரியாவில் பெரும்பகுதியை இந்த அமைப்பு கைப்பற்றியுள்ளது. தனது கட்டுப்பாட்டில் உள்ள பகுதி களில் கிலாபத் சட்டத்தை கடந்த ஜூன் மாதம் முதல் அமல்படுத்தி யுள்ளது இந்த அமைப்பு.
ஐஎஸ் தீவிரவாதிகள் சிரியா, இராக் ராணுவத்தினர் மற்றும் குர்திஸ் படையினருடன் போரிட்டு வருகின்றனர். பிற நாடுகளின் படையும் ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிராகக் களமிறங்கியுள்ளன. சிரியா மனித உரிமை கண்காணிப்பு அமைப்பின் தலைவர் ரமி அப்துல் ரகுமான் இதுதொடர்பாகக் கூறியதாவது:
கடந்த 6 மாதங்களில் ஐஎஸ் தீவிரவாத அமைப்பினர், 1,175 பொதுமக்களைக் கொலை செய் துள்ளனர். இதில், 8 பெண்களும், 4 குழந்தைகளும் அடங்குவர். கொல்லப்பட்டவர்களில் 930 பேர் சன்னி முஸ்லிம்கள். வெளிநாடுகளைச் சேர்ந்த 116 பேர் ஐஎஸ் இயக்கத்தில் சேர்ந்து போரிட்டனர். பின்னர் அவர்கள் நாடு திரும்ப நினைத்த போது அவர்களை இயக்கத்தினர் கொன்றுவிட்டனர். அதே இயக்கத்தைச் சேர்ந்த மேலும் 4 பேர் வேறு குற்றச்சாட்டுகளின ்பேரில் கொல்லப்பட்டனர்.
ஐஎஸ் தீவிரவாத அமைப்பு தங்கள் கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளில் இஸ்ஸாமிய சட்டத்தை மீறியவர்களுக்கு, பொது இடத்தில் தலையைத் துண்டித்துக் கொலை செய்தல், கல்லால் அடித்துக் கொலை செய்தல் போன்ற தண்டனைகளை ஏராளமானவர்களுக்கு வழங்கியுள்ளது.
மேலும், தங்களிடம் பிடிபட்ட எதிரி ராணுவத்தினர், சமூக ஆர்வலர்கள், செய்தியாளர்கள் ஆகியோரை சுட்டுக் கொலை செய்யும் வீடியோவையும் ஐஎஸ் அமைப்பு வெளியிட்டுள்ளது. தங்களிடம் பிடிபட்டவர்கள், எதிரிப்படையைச் சேர்ந்தவர்கள் எனச் சந்தேகிப்பவர்களை கும்ப லாக சுட்டுக் கொலை செய்யும் புகைப்படத்தையும் ஐஎஸ் வெளி யிட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.